இலங்கை

இலங்கையில் 30% நிலப்பரப்பில் மண்சரிவு அபாயம் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதனை தெரிவித்தார்.

“நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிக்கின்றனர். அந்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளது.

‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களைப் பரிசோதிக்குமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்துள்ளன. அவற்றில் 589 இடங்கள் இதுவரை பரிசோதிக்கப்பட்டு முடிந்துள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாகப் பெறப்பட்ட செய்மதி புகைப்படங்களின்படி, 10 மீற்றருக்கும் அதிகமாக மண்சரிவு ஏற்பட்ட 1,241 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் வீடுகளுக்குப் பாதிப்பில்லாத 919 இடங்களும், வீடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய 322 மண்சரிவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பெறப்படும் உடனுக்குடனான தகவல்களின் அடிப்படையில், அபாயகரமான நிலையில் உள்ள 15,000 இற்கும் மேற்பட்டோரை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

அனுமதி பெறாத கட்டிடங்கள் அல்லது ஏனைய வகை வீடுகளில் வசிப்பவர்கள் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!