ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 04 நாடுகளை பிரிக்க முயற்சிக்கிறதா அமெரிக்கா?

ட்ரம்ப் நிர்வாகம் ஆஸ்திரியா(Austria), ஹங்கேரி (Hungary) , இத்தாலி  (Italy) மற்றும் போலந்தை (Poland) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கி அமெரிக்காவின் பார்வையில் வைக்க  முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

Defense One அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 04 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட 29 பக்க அறிக்கையால்,  ஐரோப்பா முழுவதும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இடம்பெயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியால் “சிதைந்து வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஐரோப்பா குடியேற்றத்தைக் குறைக்காவிட்டால் “நாகரிக அழிப்பு”க்கு ஆளாக நேரிடும் என்றும் அந்த அறிக்கையில்  விமர்சிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் ஐரோப்பா இன்னும்  “20 ஆண்டுகளில் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் அடையாளம் காண முடியாததாக” இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த அறிக்கையில் வெளியாகியுள்ள செய்திகளை வெள்ளை மாளிகை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!