போர் பேச்சுவார்த்தைகளில் விரக்தியடைந்துள்ள ட்ரம்ப் – அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை!
உக்ரைனில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உண்மையான வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளுக்கு பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் பற்றிய அமைதி பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினராலும் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்த முன்னேற்றத்தையும் தராத சந்திப்புகளால் சோர்வடைந்துள்ளார் என்றும் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) கூறினார்.
தனது சொந்த நலனுக்காக தொடர்ந்து விவாதங்களை நடத்துவதற்குப் பதிலாக, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான ட்ரம்பின் விருப்பத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
விரைவான அமைதியை உறுதி செய்ய வெள்ளை மாளிகையின் அழுத்தத்தின் கீழ் கெய்வ் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





