பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!
“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ சில நிறுவனங்களால் உத்தேச இழப்பீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது எனினும், முழுமையான விபரங்களே மிக முக்கியம். இதற்காக சில இடங்களில் உலக வங்கியின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.
அந்தவகையில் டிசம்பர் 15 முதல் 20 ஆம் திகதிக்குள் இழப்பு பற்றிய மதிப்பீட்டை வெளியிட முடியும் என நம்புகின்றோம்.” என்றார்.





