பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இடர் நிலைமையால் பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாத பட்சத்தில் பாடசாலை அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமையை எதிர்கொண்டிருந்தால் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.




