ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் அதிகரித்து வரும் சூப்பர்ஃப்ளூ (Superflu) வழக்குகள்! மக்களுக்கு எச்சரிக்கை!

லண்டனில் சூப்பர்ஃப்ளூ வழக்குகள் கடுமையாக அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் தலைவர் எச்சரித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக வைரஸ் பரவல் மோசமடையும் என்று இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் லண்டன் பிராந்திய துணை இயக்குநர் டாக்டர் யிம்மி சோவ் (Yimmy Chow) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 7 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் லண்டன் மருத்துவமனைகளில் சராசரியாக 380 காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத அதிகரிப்பாகும்.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காய்ச்சல் தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!