அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் கூறினார்.

எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.”

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவ சுட்டிக்காட்டினார்.

1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், இதுபோன்ற எந்தவொரு முறைப்பாட்டையும் விசாரிக்க ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!