ஐரோப்பா

புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த அழைப்பு – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!

ஐரோப்பியத் தலைவர்கள் இடம்பெயர்வுக் கொள்கைகளை கடுமையாக்க இன்று அழைப்பு விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் ஒன்றுக்கூடி இது தொடர்பில் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) முக்கிய உரை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய கவுன்சிலின் பிரதிநிதிகள்புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை எளிதாக்குவது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை மற்றும் கடலோர காவல்படை நிறுவனமான ஃபிரான்டெக்ஸின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோத எல்லைக் கடப்புகள் 22% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்த நிறுவனம் 152,000 அங்கீகரிக்கப்படாத எல்லைக் கடப்புகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!