இலங்கையில் கோவில் திருவிழாவில் நடந்த விபரீதம் – பூசாரிக்கு நேர்ந்த கதி
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பூசாரி தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
(Visited 14 times, 1 visits today)





