நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தமா? அரசாங்கம் கூறுவது என்ன?
பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.
“ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி முறையாக பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்து இருந்தது.
ஆனால் எமது நிர்வாக பொறிமுறைமீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.





