நிவாரணம் பெற காத்திருப்போரின் கவனத்திற்கு…..!
புயல் நிவாரணம் வழங்குவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்குவதாக கூறி வரும் நபர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி, வாட்ஸ்அப், முகப்புத்தகம் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக ஏராளமான குறுஞ்செய்திகளைப் பரப்புவது சமீபகாலமாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பேரிடருக்குப் பிந்தைய நிவாரணத்திற்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பது மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இடம்பெறுவதாகவும், அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.





