ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் 3 மீட்டர்(10 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





