ரஷ்யாவிற்கு எதிராக கடல் ட்ரோன்களை களமிறக்கும் உக்ரைன்!
அடுத்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு எதிராக கடல் ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடல்-ட்ரோன் நடவடிக்கைகள் கடற்படை உத்திகளை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஈடுபாடுகளை மட்டுப்படுத்தியுள்ளதாவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இப்போது “அரிதாகவே இயங்குகின்றன” என்றும், பெரும்பாலும் ஒளிந்து கொள்கின்றன என்றும் உக்ரைனின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ட்ரோன்களின் செயல்திறனை நிரூபிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழு 13 மகுரா ( Magura drones) ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது, இதில் V5 மற்றும் V7 வகைகள் அடங்கும் எனத் தெரிவித்துள்ள அவர், அவை ரஷ்ய கப்பல்களை பலமுறை தாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்கால ட்ரோன் பரிணாமம், கிரீஸ் போன்ற நேட்டோ நட்பு நாடுகளுடன் விரிவாக்கப்பட்ட கூட்டு உற்பத்தியுடன் மேம்படுத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





