பிரித்தானியர்களுக்கு மின் வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரித்தானியாவின் சில பகுதிகளில் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 04.00 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேல்ஸ் (Wales) மற்றும் இங்கிலாந்தின் தென்மேற்கின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



