சீரற்ற வானிலையால் கிட்டத்தட்ட 100,000 பாடசாலை மாணவர்கள் பாதிப்பு
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடசாலைகள் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது
சுமார் 100,000 பாடசாலை மாணவர்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 16 அன்று பேரிடரால் கடுமையாக பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே(Nalaka Kaluwewe) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எந்தெந்தப் பகுதிகள் மற்றும் எந்தெந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்று(08) அல்லது செவ்வாய்க்கிழமை(09) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.





