இலங்கை

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வெளியாகிய அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியிருந்தது.

எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 618ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

4,071 வீடுகள் முழுமையாகவும், 71,121 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!