இலங்கை செய்தி

இலங்கை: சிகப்பு எச்சரிக்கை பல பகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்!

இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கையானது நாளை மாலை 4:00 மணி நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கைகையில் ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளார்ககள்.

மேலும் அந்த அறிக்கையில் ஆபத்தான பகுதிகளை மூன்று நிலைகளாக பிரித்துள்ளனர்
அதில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSD) பின்வருமாறு:  சிவப்பு எச்சரிக்கை – கட்டாயம் வெளியேற வேண்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்:

மாவட்டம் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs)
கண்டி மாவட்டம் பததும்பர, குண்டசாலை, பத்தஹேவஹேட்ட, பன்வில, மெததும்பர, தொலுவ, தும்பனை, உடநுவர, தெல்தொட்ட, கங்க இஹல கோறளை, பஸ்பாகே கோறளை, யட்டிநுவர, ஹத்தாரலியத்த, உடதும்பர, மினிப்பே, உடபலாத்த, கங்காவட கோறளை, அக்குரண, பூஜாப்பிட்டிய, ஹாரிஸ்பத்துவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கேகாலை மாவட்டம் அரநாயக்க, மாவனெல்லை, தெஹியோவிட்ட, புலத்கோஹுபிட்டிய, ரம்புக்கண, றுவன்வெல்லை, தெரணியகல, கேகாலை, காலிகமுவ, யட்டியான்தொட்ட, வரக்காபொல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குருநாகல் மாவட்டம் அலகவ, ரத்தீகம, பொல்காவலை, மல்லாவபிட்டிய, மாவத்தகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தளை மாவட்டம் உக்குவெல, நாவுல, யடவத்த, லக்கல பள்ளேகம, பல்லேபொல, மாத்தளை, ரத்தோட்ட, அம்பங்கங்க கோறளை, வில்கமுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நுவரெலியா மாவட்டம் ஹங்குரன்கெத்த, மாத்தூறட்ட, நில் தண்டஹின்ன, வலப்பனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்மஞ்சள் எச்சரிக்கை – இந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது:

மாவட்டம் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs)
பதுளை மாவட்டம் ஊவா பரணகம, பதுளை, கண்டகெட்டிய, பண்டாரவளை, சொரணாதோட்ட, ஹாலி-எல, மீகாகியுல, எல்ல, வெலிமட, ஹப்புத்தளை, லூணுகலை, ஹல்தும்முல்ல, பசறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குருநாகல் மாவட்டம் நாரம்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இரத்தினபுரி மாவட்டம் கொடகாவெல, கஹவத்த மற்றும் கொலன்ன மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நுவரெலியா மாவட்டம் கோத்மலை மேற்கு, நோர்வுட், அம்பகமுவ கோறளை, தலவாக்கலை, கோத்மலை கிழக்கு, நுவரெலியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மஞ்சள் எச்சரிக்கை – அவதானமாக இருக்கவும்

இந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது:

மாவட்டம் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs)
கொழும்பு மாவட்டம் சீதாவக்க, பாதுக்க மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
காலி மாவட்டம் எல்பிட்டி, யாக்கலமுல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கம்பஹா மாவட்டம் மீரிகம, திவுலபிட்டிய மற்றும் அத்தனகல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
களுத்துறை மாவட்டம் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொறணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தறை மாவட்டம் பஸ்கொட, அத்துரலிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மொனராகலை மாவட்டம் பிபில, மெதகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இரத்தினபுரி மாவட்டம் குறுவிற்றை, பலங்கொடை, எஹலியகொடை, பெல்மதுளை, கல்தொட்ட, கலவான, ஒபநாயக்க, ஆயகம, நிவித்திகல, இம்புல்பே, எலபத்தை, இரத்தினபுரி, கிரியெல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!