உலகம் செய்தி

மீண்டும் உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்: ரஷ்யா

நேற்று இரவு ரஷ்யா, உக்ரைன் மீது 653 டிரோன்களையும் 51 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஏவுகணை தாக்குத்தலில் கீவ்வுக்கு வெளியே உள்ள ஃபாஸ்டிவ் (Fastiv) நகரில் ஒரு ரயில் நிலைய மையத்தில் விழுந்து வெடித்ததில் அதன் பிரதான நிலையக் கட்டிடத்தையும், ரயில் பெட்டிகளையும் (rolling stock) சேதப்படுத்தியது.

மற்றும் சனிக்கிழமை அன்று உக்ரைன் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய தாக்குதல்கள் எட்டு பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி நிலையங்களை மையமாக வைத்து தாக்குதல் நடத்தப்படத்தில் பெரிய அளவிலான மின்தடைகளை (blackouts) ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இரவில் ஜாப்போரிஜியா அணுமின் நிலையம் (Zaporizhzhia nuclear power plant) தற்காலிகமாக வெளிப்புற மின்சாரத்தை இழந்ததாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது 11-வது முறையாக நிகழ்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜூலன்ஸ்கி பேசுகையில், இந்தத் தாக்குதல் “இராணுவ ரீதியாக அர்த்தமற்றது” என்றும், “இது ரஷ்யாவிற்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்றும் கண்டனம் தெரிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிகையில் உக்ரைனின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த “மிகப்பெரிய தாக்குதலை” தொடங்கியதாகதெரிவித்தது.
.
“ரஷ்யா எந்தவொரு சமாதான முயற்சிகளையும் தொடர்ந்து புறக்கணித்து, பொதுமக்களின் முக்கிய இடங்களை குறிவைத்தே தாக்குகிறது” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிகா (Andrii Sybiha) தெரிவித்தார்.

சமாதான முயற்சிகளில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் ரஷ்யாவை நோக்கி “நீண்ட கால அமைதிக்கான தீவிர ஈடுபாட்டை” காட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) இடையேயான இரண்டு நாள் பேச்சுவார்த்தை “கட்டமைப்புடன்” இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!