கொழும்பில் பதற்றநிலை;திடீரென ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்!

கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக துன்முல்லை சந்தி மற்றும் Reid அவென்யூ பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)