ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு
கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து புத்தளம் பாதையூடான ரயில் சேவைகள் இப்போது நாத்தாண்டியா வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை ரயில் நிலையத்திற்கும் இடையில் மட்டுமே இயக்கப்பட்டன.
பழுதுபார்க்கும் பணிகள் முடிந்தவுடன், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டியாவிற்கு சேவைகள் முழுமையாகத் தொடங்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.





