ரயில் பருவக்கால சீட்டுக்களை பயன்படுத்தும் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
ரயில் பருவக்கால சீட்டுக்களைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்கலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்தார்.
எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ்களில் பயணிக்க ரயில் பருவக்கால சீட்டுக்கள் செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.





