யூரோவிஷன் 2026ஐ புறக்கணிக்கும் நான்கு உலக நாடுகள்
இஸ்ரேலுக்கு(Israel) அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஆஸ்திரியாவில்(Austria) நடைபெறும் 70வது யூரோவிஷன்(Eurovision) பாடல் போட்டியைப் புறக்கணிப்பதாக அயர்லாந்து(Ireland), நெதர்லாந்து(Netherlands), ஸ்லோவேனியா(Slovenia) மற்றும் ஸ்பெயின்(Spain) ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
போட்டியை நடத்தும் ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம் (EBU), இஸ்ரேலை விலக்க வாக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாது என்று கூறியதைத் தொடர்ந்து இந்த புறக்கணிப்பு வந்துள்ளது.
காசாவில்(Gaza) பாலஸ்தீனியர்கள்(Palestinians) மீதான இனப்படுகொலைப் போருக்காகவும் இதுவரை குறைந்தது 70,125 பேரைக் கொன்றதற்காகவும் இஸ்ரேலின் பங்கேற்பு புறக்கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், போட்டியின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் நடுநிலையைப் பாதுகாக்கவும் சீர்திருத்தங்களுக்கு அதன் உறுப்பினர்கள் தெளிவான ஆதரவைக் காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.





