மது வாங்க பணம் தர மறுத்த தாயை தீ வைத்து எரித்த ஒடிசா நபர்
ஒடிசாவின்(Odisha) பத்ரக்(Bhadrak) மாவட்டத்தில் ஒரு வயதான பெண் தனது மகனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனையாளர் என்று அறியப்பட்ட 45 வயது தேபாஷிஷ் நாயக்(Debashish Nayak), தனது தாயை தீ வைத்து எரித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேபாஷிஷ் தனது 65 வயது தாயார் ஜோத்ஸ்நாராணி நாயக்(Jyotsnarani Nayak) அவர்களிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அவர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் மயங்கி விழுந்த பிறகு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு பிறகு குறித்த பெண் முதலில் பத்ரக் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பின்னர் அவரது நிலை மோசமடைந்த பிறகு கட்டாக்கில்(Cuttack) உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




