நாட்டிற்காக 300 மில்லியன் ரூபாய் நன்கொடை அளிக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம்(SLC), தலைவர் ஷம்மி சில்வா(Shammi Silva) மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தின் “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்”(Rebuilding Sri Lanka) நிதிக்கு 300 மில்லியன் ருபாய் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளது.
டித்வா(Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதிலும் அத்தியாவசிய பொது சேவைகளை மீட்டெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதிலும் இந்த பங்களிப்பு அரசாங்கத்திற்கு உதாஹவும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தேவைப்படும் போதெல்லாம் தேசத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகக் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.





