வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு பிடியாணை
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்(ICT) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) மகன் சஜீப் வாஸெட் ஜாய்(Sajib Wased Joy) மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது இணையத்தை முடக்குவதன் மூலம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி கோலம் மோர்டாசா(Golam Mortaza), நீதிபதி முகமது ஷஃபியுல் ஆலம் மஹ்மூத்(Mohammad Shafiul Alam Mahmood) மற்றும் நீதிபதி முகமது மொஹிதுல் ஹக் எனாம் சவுத்ரி(Mohitul Haq Enam Chowdhury) தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னதாக டாக்கா நீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவுக்கு(Sheikh Rehana) 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரெஹானாவின் மகள் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் சித்திக்கு(Tulip Siddiqui) 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
தொடர்புடைய செய்தி




