உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்
முன்னாள் பிரதமரும், வங்கதேச(Bangladesh) தேசியவாதக் கட்சித்(BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா(Begum Khaleda Zia) உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு(London) அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
கலீதா ஜியாவை கவனிக்க வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் லண்டனுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து(China) நான்கு மருத்துவர்கள் கலீதா ஜியாவின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ளனர், மேலும் ஐக்கிய இராச்சியத்தைச்(United Kingdom) சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெல்லி(Richard Bailey) அவரது சிகிச்சையை மேற்பார்வையிடுகிறார்.
பேகம் கலீதா ஜியாவை விமானம் மூலம் கொண்டு செல்ல கத்தார்(Qatar) இராச்சியம் விமான ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கியுள்ளது.
மூன்று முறை பிரதமராக இருந்த அவர், மூச்சுத் திணறல் காரணமாக நவம்பர் 23 அன்று டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
இந்நிலையில், கலீதா ஜியாவுக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளை வங்கதேச இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோயில்கள், தேவாலயங்கள், பகோடாக்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி
மருத்துவமனையில் முன்னாள் பிரதமரை சந்தித்த வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்




