புதிய பாதீட்டை முன்வைக்குமாறு சஜித் அணியும் வலியுறுத்து
2026 ஆம் ஆண்டுக்காக புதிய வரவு- செலவுத் திட்டமொன்றே முன்வைக்கப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன, பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மீள் கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு புதிய திட்டங்களுடன் வரவு- செலவுத் திட்டம் வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
புதிய வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்வரை செலவுகளை ஈடுசெய்வதற்கு இடைக்கால கணக்கறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.





