நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகின
டித்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவினால் இதுவரை 188,974 பேர் பாதிக்கப்பட்டு 1,374 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேரிடரினால் 479 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், 455,405 குடும்பங்களைச் சேர்ந்த, 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




