களனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
களனி ஆற்றின் நாகலகம் வீதியில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, களனி ஆற்றின் நாகலகம் வீதியில் நீர்மட்டம் அளவீட்டில் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணியளவில் 4.05 அடியாக பதிவாகியுள்ளது.
எனினும், மல்வத்து ஓயா பகுதியில் இன்னமும் லேசான வெள்ள நிலை தொடர்வதாகவும், அந்த நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மற்ற அனைத்து நீர்த்தேக்கங்களிலும் வெள்ள நிலைமை குறைந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
எனினும் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




