கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடப்பட்டது
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அழிவினால் கடுகன்னாவ நகர் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





