இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில்(Raipur) நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 102 ஓட்டங்களும் ருதுராஜ் கைக்வாட்(Ruturaj Gaikwad) 105 ஓட்டங்களும் கே.எல் ராகுல் 66 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 359 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ரம்(Aiden Markram) 110 ஓட்டங்களும் மத்தியூ ப்ரீட்ஸ்கி(Matthew Breetzke) 68 ஓட்டங்களும் அதிரடியாக விளையாடி டெவல்ட் ப்ரேவிஸ்(Dewald Brevis) 54 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இறுதி ஒருநாள் போட்டி 6ம் திகதி விசாகப்பட்டினம்(Visakhapatnam) மைதானத்தில் நடைபெறவுள்ளது.




