மருத்துவமனையில் முன்னாள் பிரதமரை சந்தித்த வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்
வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைநகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான கலீதா ஜியாவைச்(Khaleda Zia) சந்தித்துள்ளார்.
“தலைமை ஆலோசகர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்தினர், கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை பொறுமை காக்குமாறு வலியுறுத்தினார்,” என்று யூனுஸின் பத்திரிகைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கலீதா ஜியாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் தலைவர் யூனுஸுக்கு அவரது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இரண்டு பெரிய அமெரிக்க(America) மருத்துவமனைகளின் நிபுணர்கள் மற்றும் பிரிட்டன்(Britain) மற்றும் சீனா(China) உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அவரது சிகிச்சை நடைமுறைகளை மேற்பார்வையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்திப்பிற்கு போது கலீதா ஜியாவுக்கு அனைத்து வகையான அரசாங்க ஆதரவையும் வழங்குவதாக முகமது யூனுஸ் உறுதியளித்துள்ளார்.
மூன்று ஆயுதப்படைத் தலைவர்களான ஜெனரல் வக்கர் உஸ் ஜமான்(General Waqar Uz Zaman), அட்மிரல் எம் நஸ்முல் ஹசன்(Admiral M Nazmul Hassan) மற்றும் விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஹசன் மஹ்மூத்(Air Chief Marshal Hassan Mahmood) ஆகியோர் கலீதா ஜியா சிகிச்சை பெற்று வரும் எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் அவரைச் சந்தித்த ஒரு நாளுக்குப் பிறகு யூனுஸின் வருகை இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி
மருத்துவமனையில் உள்ள முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவிற்கு உயர் பாதுகாப்பு




