ஐரோப்பா

இங்கிலாந்து குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தம் முன்மொழிவு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ( Wales) உள்ள குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தங்களை நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி ( David Lammy) முன்மொழிந்துள்ளார்.

சமீபத்தில் பிரித்தானியாவின் சிறைச்சாலைகளில் இருந்து 90இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த சீர்த்திருத்தம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திருட்டு உள்ளிட்ட குற்றங்கள், மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறைதண்டனை  விதிக்கக்கூடிய வழக்குகளுக்கான ஜூரி விசாரணை ( jury trial)  உரிமையை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள்  அரச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை  01 இலட்சம் என்ற தேக்க நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாமதங்களை சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றம் தைரியமான மற்றும் அவசியமான முடிவு எனவும்  டேவிட் லாமி ( David Lammy) கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் டேவிட் லாமியின் இந்த திட்டங்கள் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

தனிநபர் உரிமைகள் மீறப்படுவதாகவும், தேக்க நிலையைக் குறைப்பதில் அவற்றின் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!