இலங்கை வந்தடைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிவாரண விமானம்
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) இருந்து மனிதாபிமான நிவாரண விமானம் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
அவசரகாலப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர்(Globemaster) விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இந்தப் நிவாரணங்கள், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான மருத்துவர் அனில் ஜெயந்த(Anil Jayantha), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக(Anura Karunathilaka) மற்றும் இலங்கையின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு(Janitha Ruwan Kodithuwakku) ஆகியோரால் அதிகாரப்பூர்வமாகப் பெறப்பட்டுள்ளது.
இந்தப் பொதியில் 1,116 உணவுப் பொட்டலங்கள், குடிநீர், கூடாரங்கள், போர்வைகள், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய 336 நிவாரண மற்றும் உதவிப் பைகள் உள்ளன.
இந்நிலையில், ஒரு முக்கியமான நேரத்தில் ஒற்றுமையையும் ஆதரவையும் வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்கு இலங்கை ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.




