நாடு முழுவதும் மீண்டும் மழை பெய்யும் அபாயம்
அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டித்வா புயலின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் மழை அதிகரிக்கும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




