சிலாபம் வைத்தியசாலை நாளை மீண்டும் திறக்கப்படும்
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அதன் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சேதமடைந்த ஏனைய அனைத்து பிரிவுகளையும் படிப்படியாகவும் விரைவாகவும் மீட்டெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




