பண்டிகைக் காலம் – பரபரப்பாகும் இங்கிலாந்து விமான நிலையங்கள்!
இங்கிலாந்து விமான நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான கிறிஸ்துமஸ் காலத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் 22 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீத்ரோ விமான நிலையம் மட்டும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டில் 90.2 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் இடையூறுகளைச் சரிபார்க்கவும், பாதுகாப்பு தாமதங்களைத் தவிர்க்கவும் மேம்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.





