மின்சாரம் மற்றம் எரிவாயு கசிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழல் குறித்த சிறப்பு அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது.
இதற்கமைய வெள்ளத்திற்கு பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பும் மக்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையின் வலியுறுத்தல்,
01. மின் மூலங்களை அணுகுவதற்கு முன் அதிகாரப்பூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெறுங்கள்.
02. ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
03. எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்கவும்.




