ஐரோப்பா முக்கிய செய்திகள்

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை  கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் தேவையில்லை என்ற செய்தியை அனுப்பும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உக்ரைனின் இராணுவம் புடினின் கூற்றுக்களை மறுத்துள்ளது. போக்ரோவ்ஸ்கில் (Pokrovsk) ரஷ்யாவின் முன்னேற்றங்களை உக்ரைன் படைகள் தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றன” என்று உக்ரைனின் 7வது விரைவு பதில் படையினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் முக்கியமான தற்காப்பு கோட்டையான போக்ரோவ்ஸ்கை கைப்பற்றுவதற்காக ரஷ்யா ஒன்றரை வருடங்களாக முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!