மற்றொரு சூறாவளி உருவாகிறதா? வானிலை ஆய்வுத் துறை விளக்கம்!
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், இந்த மாதம் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரியான மெரில் மெண்டிஸ் நேற்று தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு குறைந்த அழுத்த அமைப்பு அல்லது சூறாவளி புயல் உருவாகும் என்ற செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் வரும் நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




