UKவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த அழைப்பு!
பிரித்தானியாவில் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 800,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
சமூக நீதி மையத்தின் (CSJ) புதிய பகுப்பாய்வில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட 10 பெற்றோரில் நான்கு பேர் தங்கள் குழந்தை சமூக வலைத்தளத்தில் குறைந்தது ஒரு தளத்தையாவது பயன்படுவத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ் (Lord Nash) இந்த எண்ணிக்கையை “ஆழ்ந்த கவலைக்குரியது” என்று விவரித்துள்ளார்.
அத்துடன் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





