காட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆஸ்திரிய சமூக வலைதள பிரபலம்
ஆஸ்திரியாவைச்(Austria) சேர்ந்த ஸ்டெபானி பைபர்(Stephanie Piper) என்ற அழகு துறை பிரபலம் அவரது முன்னாள் காதலனால் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட பிறகு குறித்த நபர் உடலை சூட்கேஸுக்குள் மறைத்து ஒரு காட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பனை(makeup), பேஷன்(fashion) மற்றும் பாடும்(singing) உள்ளடக்கத்திற்காக அறியப்பட்ட ஸ்டெபானி பைபர் இறக்கும் போது அவருக்கு 31 வயது.
நவம்பர் 23 அன்று ஒரு விருந்தில் இருந்து வீடு திரும்பிய பின்னர் பைபர் காணாமல் போயுள்ளார் என்று பைப்பரின் உறவினர்கள் மற்றும் சக பணியாளர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பைப்பரின் முன்னாள் காதலன் ஸ்லோவேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் இரண்டு ஆண் உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.





