விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றல்
நேற்றைய தினம் வென்னப்புவவின் (Wennappuwa) லுனுவிலா (Lunuwila) பகுதியில் விமானப்படையைச் சேர்ந்த பெல் 212 (Bell 212)எனும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதை இன்று சம்பவ இடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காகச் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
திடீரென லுனுவிலா பாலத்திற்கு அருகில், ஹெலிகாப்டர் கின் ஓயா (Gin Oya) ஆற்றுக்குள் விழுந்தது.
விமானிகள் பாதுகாப்பாக தரையிறங்க முயன்றும், ஹெலிகாப்டர் கின் ஓயாவில் விழுந்தது.
உடனடியாக உள்ளூர் மக்களும் மீட்புக் குழுக்களும் விரைவாகச் செயல்பட்டுஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் அனைவறையும் மீட்டு மாரவிலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், ஹெலிகாப்டரின் விமானியான, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியா (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்தார்.
சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரின்போது, முப்படைகள், காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து, இலங்கை விமானப்படை விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை (extensive humanitarian operations) மேற்கொண்டு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது.





