நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுர இடையே தொலைபேசி உரையாடல்
நாட்டில் நிலவும் பேரிடர் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடலில் தித்வா(Ditwah) சூறாவளியை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்திய மக்கள் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க, மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குவதையும் ஜனாதிபதி திசாநாயக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.





