சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது.
சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை மட்டுமே மீட்புக்குழுவினரால் கைப்பற்ற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.





