மண்மேடு சரிந்ததில் 3 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்று மாத குழந்தை மற்றும் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.





