இலங்கையில் “டிட்வா” புயலின் கோரத்தாண்டவம் : 56 பேர் மரணம்
இலங்கையில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.
தற்போது இந்த புயல் வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுதும் ஏற்பட்டுள்ள அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.




