புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
காலை வேளையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் த. நவநீதன் தலைமையில் நகரின் பொது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூ தூவி அஞ்சலியினை செலுத்தினர். இதனுடன், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மாவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர்.
வருடந்தோறும் வழமையாக நடைபெறும் இந்த அஞ்சலி நிகழ்வு, இவ்வாண்டும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







