ஹரியானாவில் பயிற்சியின் போது இளம் கூடைப்பந்து வீரர் உயிரிழப்பு
ஹரியானாவின்(Haryana) ரோஹ்தக்கில்(Rohtak) 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் ஒருவர் பயிற்சியின் போது கூடைப்பந்து கம்பம் அவரது மார்பில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
லகான் மஜ்ராவில்(Lakhan Majra) உள்ள மைதானத்தில் ஹர்திக் ரதி(Hardik Rathi) தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கம்பம் உறுதியாக இல்லாததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது நண்பர்கள் அவருக்கு உதவ விரைந்த போது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன், காங்க்ராவில்(Kangra) நடந்த 47வது ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஹைதராபாத்தில்(Hyderabad) நடந்த 49வது ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் புதுச்சேரியில்(Puducherry) நடந்த 39வது இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்





