ஷேக் ஹசீனாவின் வங்கி பெட்டகத்தில் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில்(Locker) இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச(Bangladesh) ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டகத்தை திறந்த பிறகு இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக தேசிய வருவாய் வாரியத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CIC) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹசீனா பதவியில் இருந்தபோது பெற்ற சில பரிசுகளை, சட்டத்தின்படி, “தோஷகானா” என்று அழைக்கப்படும் மாநில கருவூலத்தில் வைக்க தவறிவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது தேசிய வருவாய் வாரியம் வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஹசீனா தனது வரி தாக்கல்களில் மீட்கப்பட்ட தங்கத்தை அறிவித்தாரா என்பதையும் ஆய்வு செய்து வருவதாகவும் தேசிய வருவாய் வாரியத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட கொடிய அடக்குமுறை தொடர்பாக குற்றவியல் நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!





